Breaking News
recent

Vijay Sing Song in PULI

நாளையதீர்ப்பு படத்தில் அறிமுகமான விஜய் அதையடுத்து தான் நடித்த தேவா படத்தில் அய்யய்யோ அலமேலு ஆவின் பசும்பாலு உள்பட 3 பாடல்களை பாடினார். அதற்கடுத்த படமான ரசிகனில் பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி என்று பாடியவர் அவ்வப்போது தான் நடிக்கும் படங்களில் தொடர்ந்து
பின்னணி பாடி வந்தார். அந்த வகையில், பத்ரியில் என்னோட லைலா, பகவதியில் கோககோலா பாடல்களுக்கு பிறகு ஒரு ஏழு ஆண்டுகளாக பின்னணி பாடுவதை நிறுத்தியிருந்த விஜய், துப்பாக்கியில் கூகுள் கூகுள், ஜில்லாவில் கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு என்ற ஹிட் பாடலை பாடியிருந்தார். இதன் மூலம் சிறந்த பாடகராக உருவெடுத்தார்.
அதேபோல், தேவர்மகனில் போற்றிப்பாடடி பெண்ணே என்ற பாடலை முதன்முதலாக பாடிய ஸ்ருதிஹாசன், தொடர்ந்து பல பாடியவர், தற்போது ஹீரோயினியான பிறகும் பல மொழிகளிலும் பின்னணி பாடி வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் மான்கராத்தேயில் உன் விழிகளில், என்னமோ ஏதோ படத்தில் செட்டப் யுவர் மவுத் போன்ற பாடல்களை பாடியிருந்தார்.
இந்த நிலையில், விஜய் - ஸ்ருதிஹாசன் இருவரும் தற்போது இணைந்து நடித்து வரும் புலி படத்தில் அவர்கள் இருவரையும் இணைத்து ஒரு டூயட் பாடலை பாட வைக்கும் முயற்சி நடக்கிறது. இந்த படத்திற்கு இசையமைக்கும் தேவி ஸ்ரீபிரசாத், அவர்களை ஒரு பெஸ்ட் டியூனில் பாட வைக்க வேண்டும் என்று டியூனை ரெடி பண்ணிக்கொண்டிருக்கிறார். மேலும், விஜய் ரசிகர்கள் அவரது பாடல்களை பெரிய அளவில் ஹிட் பண்ணி விடுவதால், தமிழில் இந்த பாடலை தனது மெகா ஹிட் பாடலாக்கி விட வேண்டும் என்றும் மெனக்கெட்டு வருகிறார் தேவி ஸ்ரீபிரசாத்.

Unknown

Unknown

No comments:

Post a Comment

The Boss Trolls : Fb/thebosstrolls : Twitter/Vijayfanstweets. Powered by Blogger.